2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல்.
இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைப் பூண்டோடு அழிக்க மேற்கொண்ட முயற்சியாகவே வெளிப்பட்டிருக்கிறது.
இன்றுவரை துடைக்கப்படாத பாலஸ்தீனத்து முஸ்லிம்களின் துயரத்தை மிகையின்றிக் காட்சிப்படுத்தும் இந்நூல், இஸ்ரேல் என்கிற ஓர் அரசே எப்படி ஒரு தீவிரவாத இயக்கம் போலச் செயல்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
இக்கட்டுரைகள், மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்தவை.
Be the first to rate this book.