பிலிம் சொசைட்டி இயக்கம் என்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். பிலிம் சொசைட்டிகளில் போடப்படும் படங்களைப் பார்க்கும்போது பல நாடுகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும், கலாசாரங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். பிலிம் சொசைட்டி இயக்கம் ஒரு பேரியக்கமாக வேர் பிடித்து வளர்ந்தால் சினிமா ரசனை வளரும். ஆனால், இந்தத் திரைச் சங்கங்களின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெருமளவில் 'அங்கத்தினர்கள் சேருவது இல்லை. கவனிப்பார் இன்றி சில திரைச் சங்கங்கள் மூடப்பட்டு விட்டன.
Be the first to rate this book.