அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக் கரங்களில் சிதறுண்டு உயிர்த் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே அக் கதைகளில் நாம் வாசிக்க முடிகிறது. அக்குரல் நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.
இதுகாறும் நாம் போதித்த அறம் குறித்து அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கை அதன் பொருளைப் பற்றி நம்மிடம் கேட்டு நிற்கிறது. தலைகுனிந்து பேசாமலிருப்பதைத் தவிர நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்?
- எம்.கோபாலகிருஷ்ணன்
Be the first to rate this book.