காந்தார பாணி கலை, கலாசாரம், கட்டவியல் ஆகியவை குஷானர்களின் ஆட்சியில் உச்சநிலையை அடைந்தது, இந்தப் பகுதியின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் கங்கைச் சமவெளி முழுவதும் குஷானர்களின் பேரரசு விரிந்தது. ஆனால் தொடக்கம் இருக்கும் எதற்கும் முடிவும் இருந்தாக வேண்டுமல்லவா?
குஷானர்களுக்குப் பிறகு வெவ்வேறு வம்சத்தினர் காந்தாரத்தில் ஆட்சி செலுத்தினர். சசானியர்கள், கிடாரைட் குஷானர்கள், வெள்ளை ஹன்கள் ஆகியோரின் படையெடுப்புகளில் காந்தாரம் கைமாறியது. இந்தக் காலகட்டத்தில் பௌத்த சமயமும் காந்தார பாணி கலையும் மெல்ல மறைய ஆரம்பித்தன.
பொஆ 5ஆம் நூற்றாண்டில் ஹன்கள் காந்தாரத்தையும் அதன் முக்கிய பகுதிகளையும் அழித்துச் சேதப்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. ஹன்கள் அரசியல் லாபத்துக்காகப் பௌத்த சமயத்தைப் புறக்கணித்து இந்து சமயத்தைப் பின்பற்றினர். அதன் மூலம் இந்தியாவில் இந்து சமயத்தை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குப்தர்களுடன் உறவை ஏற்படுத்தி சசானியர்களை முறியடிக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.
- நூலிலிருந்து...
Be the first to rate this book.