இன்றைய நாட்களில் தமிழ் இலக்கிய சூழலில் நமது படைப்புத்திறன் எவ்வளவு மேலோங்கி செல்கிறது என்பதற்கு நான், இந்த படைப்பை உதாரணமாக சொல்ல முயல்கிறேன்.
காரணம், விசித்திரமான மனப்போக்குடன் ஒரு பெண், மிக விரைவில் முற்றுப் பெறப் போகிற தன் வாழ்நாளின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் ஒரு சிறு பகுதியை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். நான் முன்பு தமிழ் சூழலில் இப்படியொரு இளமையான படைப்பை வாசித்ததாக எந்த நினைவும் இல்லை.
இது ஒரு அப்பட்டமான தேர்ந்த படைப்பு என்று இதை வாசிக்கும் போது என் உள்ளுணர்வு உரக்க கூவிக்கொண்டே இருந்தது.
இந்த நளினமான அழகிய முயற்சியை தமிழ் வாசகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இதைப் போன்ற ஒரு குறுநாவலை நானும் எழுத ஆசைப்படுகிறேன்.
உலகின் மிகச் சிறந்த சிறுகதையாளன் ஆண்டன் செகாவ் அவர்களின் சிறுகதை ஒன்றை பாத்திரமாகக் கொண்டு எழுதிக் கொள்ளும் அளவு மிகத் தகுதியானதொரு படைப்பாக இந்த சின்னஞ்சிறு குறுநாவலைப் பார்க்கிறேன்.
- கரன் கார்க்கி, எழுத்தாளர்
Be the first to rate this book.