பள்ளிகளில் பெண் மாணவிகளுக்கு என்றே உள்ள மற்றொரு பிரத்யேகப் பிரச்சனை சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூலமாக ஏற்படும் கேலி கிண்டல் மற்றும் பாலியல் சீண்டல்களும் தொந்தரவுகளும் தான்.அறிவையும் சமூக நன்மதிப்புகளையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது பெண் மாணவிகள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள் அவர்களின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிடுகின்றது.பெண் குழந்தைகள் இது போன்ற நிகழ்வுகளை வெளியில் பேசினால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதும் அது அவர்களின் எதிர்கால மணவாழ்க்கையோடு தொடர்புடையது என்பதால் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வந்த சமூக கலாச்சார நிர்பந்தங்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கு ஆண்களுக்கு அசட்டு துணிச்சலை கொடுக்கின்றது.
Be the first to rate this book.