உலகமயமாக்கலால் பல்வேறு வகைகளிலும் நமது தேசத்தின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். உலகமயமாக்கல் என்ற பெயரில், எவ்வாறு அது நமது பொருளாதார உயிராதாரத்தின் மீது சர்வதேச நிதிமூலதனத்தின் மரணப்பிடியை அதிகரித்துள்ளது; எவ்வாறு அது அரசியல் ரீதியான முடிவுகள் எடுப்பதைத் தீர்மானிக்கிறது; எவ்வாறு அது மக்களுடைய சமூகப் பண்பாட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் ஊடுருவி வருகிறது; எவ்வாறு, எந்த அளவுக்கு அது நமது பொருளாதாரத்தின் மீதும், மக்கள் மீதும், தேசம் முழுவதும் பாதிப்பை படக்கூடிய ஒரு தேசத்தின் மீது ஒரு பருண்மையான தாக்குதல் இன்றி இத்தகைய கொடூரமான தாக்குதல் எவ்வாறு சாத்தியம் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.
Be the first to rate this book.