இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நிலப்பகுதிகளையும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர் . வேறு கிரகங்களிலும் கால் பதித்துள்ளனர். புதிய தாவர வகைகள், நாம் அறிந்திராத, அழிந்துபோன விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். இவர்களின் வாழ்க்கை வரலாறு ஆச்சரியமூட்டுப வகையாக மட்டுமல்ல, நம்மையும் பயணம் செய்யத் தூண்டும் வகையாக அமைந்துள்ளன. அவர்களில் கடல் பயணம் செய்து நாடுகள் ஆண்ட 1.மார்க்கோ போலோ, 2.கிறிஸ்தோபர் கொலம்பஸ், 3.அமெரிகோ வெஸ்புகி, 4.வாஸ்கோட காமா, 5.பெர்டினென்ட் மெகல்லன், 6.ஜாக்கேவஸ் கார்டியர், 7.ஜேம்ஸ் குக், 8.ஜென் பேரட், 9.அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட், 10.முதலாம் ராபர்ட் பிரவுன், 11.ஜோஹான் லுட்விக் புர்ஹாட், 12.ஜேம்ஸ் ஹால்மன், 13.ஜான்லாயிட் ஸ்டீபன்ஸ், 14.சார்லஸ் டார்வின், 15.டேவிட் லிவிங்ஸ்டன், 16.இரண்டாம் ராபர்ட் பிரவுன், 17.நெல்லி பிளை, 18.மூன்றாம் ராபர்ட் பிரவுன், 19.சர் எட்மண்ட் ஹிலாரி, 20.நீல் ஆம்ஸ்ட்ராங், 21.யூரி ககாரின், 22.லாபெராஸ், 23.லுட்விக் லிச்சார்ட், 24.அலெக்சாண்ட்ரா டேவிட் நீல், 25.அட்டிவான் பாரென்- காஸாசிவான் மாயென், 26.ஹென்றி ஹட்ஸன், 27.லூயிஸ் மற்றும் கிளார்க், ஆகியோர்களின் வரலாறுகள் இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4 உலகம் சுற்றி
I love this book
Rk Moorthi 14-06-2021 11:59 pm