'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போற்றத்தக்க உயிர்க் களையோடும் வலிவோடும் சித்தரிக்கிறது. இந்நூல். உண்மை விவரங்களின் வெறும் பட்டியலாகவோ. ஆவணங்களின் திரட்டாகவோ அமையாமல். வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாய்த் திகழ்கிறது. இந்தக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாய் இனமாதிரியாய் இருப்பதால். இவை இந்தப் புரட்சியில் பங்கு கொண்டவர் எவருக்கும் அந்நாட்களில் நேரில் அவர் கண்ணுற்ற இவற்றையொத்த காட்சிகளை அப்படியே கண்ணெதிரே தோன்றச் செய்கின்றன. உள்ளதை உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரன் மக்களது உள்ளத்து உணர்ச்சிகளை. இந்த மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சிகளை இம்மியும் பிறழாது வியத்தகு நேர்மையுடன் புலப்படுத்துகின்றது.
Be the first to rate this book.