உலகப் பேருரைகள் மூலமாக... சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள், மனிதகுல வரலாற்றில் மனிதனைப் போலவே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் குரல்களில் ஒலிப்பதை கேட்கலாம். போரின் கொடுமைகளை விக்டர் ஹீயூகோ உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சிப் பிரவாகமாக்கிய அடுத்த நூற்றாண்டிலேயே இப்புவிக்கோளம் பேரழிவுகளையும் அதுவரை கற்பனைக்கு எட்டாத புதிய ஆயுதங்களையும் உருவாக்கி இரண்டு நாடுபிடி சண்டைகளை எதிர்கொண்டதையும் அதனையொட்டி பல்வேறு நாடுகளின் உளப்போக்குகளை அந்தந்த நாட்டுத் தலைவர்களின் வாய்மொழியாகவே அறிந்து கொள்ளலாம். சுமார் இரண்டாயிரத்து ஐநூறுமுறை இந்தபூமி சூரியனைச் சுற்றி வந்தபோது அந்த தீராப் பயணத்தின் முக்கிய கட்டங்களை பறவைப்பார்வையில் காணும் வாய்ப்பினை அளிக்கிறது இத்தொகுப்பு.
Be the first to rate this book.