ஆங்கிலத்தில் பிழையின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவும் கட்டுரைகளைத் தொடர்ந்து `இந்து தமிழ் திசை' நாளிதழின் பல இணைப்பிதழ்களிலும் எழுதி வருபவர் ஜி.எஸ்.எஸ்.
அந்த வரிசையில், உங்களின் கைகளில் தவழும் `உலக மொழி உங்களிடம் - பாகம் 3' நூலும் உங்களின் பேராதரவைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஆங்கிலத்தை அலுவல் சார்ந்த மொழியாகவே பெரும்பாலும் அணுகுவார்கள். ஆனால், ஜி.எஸ்.எஸ். அதையும் தாண்டி, அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அர்த்தம், அந்த வார்த்தையின் வேர்ச்சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பது போன்ற விரிவான தகவல்களையும் போகிற போக்கில், படிப்பவர்களின் மனத்தில் பதியவைத்துவிடும் வல்லமை மிக்கவர்.
வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமான `போட்டியில் கேட்டுவிட்டால்', `கேட்டாரே ஒரு கேள்வி' போன்ற சுவாரஸ்யங்கள் இந்நூலிலும் இடம்பிடித்துள்ளன. மேலும், கேலிச் சித்திரங்களின் வழியே வெளிப்படும் ரசனையான உரையாடல்கள், குட்டிகுட்டியான வடிவில் பெட்டிச் செய்திகள்... என சுவாரஸ்யங்களின் பட்டியல் நூலில் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.