நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நுழைகிற பொழுது இந்த உலகம் பேராசை கொண்டதாக, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக,இனவெறி,தேசிய மேலாதிக்க வெறி கொண்டதாக,காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக, பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது
...அரசு தோன்றி,சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்களாக வாழ்ந்தனர்.
அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது.
உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன...
...வேறு சொற்களில்சொல்வதானால், ஆளுவோரோ,ஆளப்படுவோரோ, ஏழைகளோ,பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர்.
-நூலிலிருந்து....
Be the first to rate this book.