உலகின் தலைசிறந்த நவீன இலக்கியப் படைப்புகளைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
யான் மார்ட்டெல் எழுதிய கஐஊஉ ஞஊ டஐ என்ற நாவலைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூல், ரஷ்ய இலக்கியமேதைகளான ஆண்டன் செகாவ், லியோ டால்ஸ்டாய், மக்சீம் கார்க்கி, இவான் துர்கனேவ், அலெக்ஸாண்டர் புஷ்கின், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் சுவையாக விளக்குகிறது. பிரெஞ்ச் இலக்கியத்தில் தடம் பதித்த மாப்பசான், ஹென்ரி சாரியர், எமிலி úஸாலா ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும், உலக அளவில் புகழ்பெற்ற சாதத் ஹாசன் மாண்ட்டோ, செல்மா லாகர் லெவ், எட்கர் ஆலன்போ, நட் ஹாம்சன், லூஸýன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஹென்ரி சாரியர், போலோகொய்லோ, லூயி போர்ஹே, ஸிட்னி ஷெல்டன், ஃப்ரன்ஸ் காஃப்கா ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசும் விரிவான அறிமுக நூலாக இது திகழ்கிறது.
உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்பாளியின் சிறந்த நூல்களைப் பற்றிய அறிமுகம் என்பது அவற்றைப் பற்றிய தகவல்களாக மட்டுமல்லாமல், அவற்றின் கதைச் சுருக்கங்களாகவும், அவற்றின் சாரத்தைப் பிழிந்தெடுத்தெடுத்து சுவையாகத் தருபவையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. படைப்பு எழுதப்பட்ட காலம், அவற்றின் பின்னணி, படைப்பாளிகளின் தனித்தன்மைகள் என உலக இலக்கியங்களின் வாசலை விரியத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.