எதைப் பார்க்கத் தவறினாலும் வெனிஸ் நகரைப் பார்க்கத் தவறவே கூடாது என்று பெருமையோடு சிலர் கூறுவர். ஏனென்றால் அது ஓர் அசாதாரண நகரம்! அதன் அமைப்பு அப்படி உள்ளது!
வெனிஸ், இத்தாலி நாட்டிற்கு மகுடமாய் விளங்குகிறது. அது நீரின் மேல் கட்டப்பட்டுள்ளது போன்ற பிரமையை உண்டு பண்ணுகிறது. நூறு தீவுகளின் மேல் அந்த அழகிய நகரம் நிற்கிறது. நம்மூரில் பஸ் ஓடுவதுபோல, மொத்தம் 177 வாய்க்கால்களில் நீராவிப் படகுகள் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கும். ஏனென்றால், அங்கே பஸ்ஸில் செல்ல முடியாது. சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்கும்போது, பஸ்ஸிலோ டிராமிலோ எவ்வாறு செல்ல முடியும்? ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நீராவிப் படகுகளில் தான் சென்று வரவேண்டும்.
வெனிஸ் நகரில் கண்டு வியப்பதற்கும் களிப்பதற்கும் பல இடங்கள் உள்ளன அங்கு புராதனப் பெருமையைப் பறைசாற்றும் கலைவண்ணம் மிகுந்த அரண்மனை உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் கலையம்சத்துடன் கட்டப்பட்ட புனித மார்க் தேவாலயத் தோற்றத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சலவைக்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது இந்தத் தேவாலயம் . இங்கு மாட மாளிகைகள் ஏராளம், ஏராளம்! வியாபார வேந்தர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில் வாழ்கின்றனர்.
Be the first to rate this book.