தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் உக்ரைனின் விதி அதற்கு நிம்மதியைத் தருவதாக இல்லை. மீண்டும் இப்போது ஒரு ரஷ்யப் படையெடுப்பு. உக்ரைனின் பிரச்னைகளை, ரஷ்யப் படையெடுப்பின் காரணங்களை, உக்ரைனைப் பகடைக் காயாக வைத்து மேற்கு நாடுகள் ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தை இந்நூல் விவரிக்கிறது.
உக்ரையீனா, 'மெட்ராஸ் பேப்பர்' இணைய வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
Be the first to rate this book.