மனித குலத்தில் வகைமைக்குப் பஞ்சமில்லை. வகைமைமீது கொண்டிருக்கும் பிரியம் இந்தப் பக்கங்களில் உறுதிப்பட்டிருக்கிறது. இது உண்மையில் முழுமைமீது கொள்ளும் விருப்பம்தான். (குமாரசெல்வா) தன் அனுபவ உலகத்தை ஒட்டி நின்று பெற்று, விலகி நின்று சொல்கிறார். எல்லாக் கதைகளிலும் குமிழியிடும் நகைச்சுவை உணர்வு விலகலையும் விமர்சனத்தையுமே காட்டுகின்றன. விவரிப்பின் வக்கணையைத் தவிர்த்துச் சுருக்கத்தின் அடர்த்தியைப் பிடிக்க விழையும் மனம். எழுத்துப் பாங்கில் மறைவுகள் உள்ளன. மீறல்களும் சிடுக்குகளும் உள்ளன. கதையை அர்த்தத்தின் தளத்திலும் காலத்தின் முன்னும் நீவி எடுக்க வேண்டிய சிரமம் சந்தோஷம் தரக்கூடியது.
தமிழின் தற்கால எழுத்திலேயே ஒரு புதிய தடம் இந்தக் கதைகள்.
Be the first to rate this book.