மொட்டை மாடியின் விளிம்பில் நின்றபடி தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் வானத்தைக் கையகப்படுத்தும் சாமானியனின் கதை இது. கனவைக் கண்ணுக்குள் ஒளித்துவைத்து லட்சியத்தின் பாதையில் வலி சுமந்து நடந்து சென்ற ஒருவனின் வாழ்க்கைப் பயணம், சென்னை மாநகரின் வீதிகளில் மீட்டர் போட்டபடி விரைகிறது. சூழல் அவனைப் புரட்டிப் போட்டு வேடிக்கை காட்டினாலும் கண்ணீர் துடைத்து ஆறுதலாய் புன்னகைக்கும் மனிதர்களின் கைத்தட்டல்களுடன் உயரம் தொட்ட எளியவனின் நாட்குறிப்புகளே இந்நாவல். வியர்வையின் உப்புச்சுவையை தாள்களெங்கும் தடவியபடி செல்லும் கதையில் தென்படுபவர்களெல்லாம் எல்லோரையும் போல ஒரு சூரியன் கீழ் வாழ்பவர்களே. கதை நாயகனோடு நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரிக்கவும் அழவும் சந்தர்ப்பங்களை உருவாக்குகிறது நாவல்.
Be the first to rate this book.