பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம், பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமலஎன்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னாலும், மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள்வரை அங்கே புரிந்திருக்கிற திருவிளையாடல்கள் குலைநடுங்கச் செய்பவை. இதனை முஷர·ப் விவரிக்கும் சம்பவங்களின் மூலமே புரிந்துகொள்ளமுடியும்.
தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விவரிக்கிறார் முஷரஃப்.
ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி...
முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.
இதைவிட சர்ச்சைக்கிடமான ஒரு புத்தகம் 2006-ம் ஆண்டு வெளியாகவில்லை.
Be the first to rate this book.