உடலில் உள்ள உறுப்புகள் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருப்பதைப் பொறுத்தே, ஒரு மனிதனுடைய உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. உணவு, காற்று போன்றவை நமக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தேவைகள். உண்ணும் உணவையும் சுவாசிக்கும் காற்றையும் உடல் உறுப்புகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதுதான் உடற்கூறு அதிசயம்! உணவு செரிப்பது எப்படி? செரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் எங்கே, எப்படி, எவ்வாறு மாற்றம் ரத்தம் சுத்தமடைவது எவ்வாறு? இதுபோன்ற ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். உடலின் இயக்கத்துக்கு உறுப்புகள் எப்படி ஒத்துழைக்கின்றன என்பது, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது என்பதால், நாம் ஒவ்வொருவரும் உடல் உறுப்புகளின் அமைப்பியல் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சுட்டி விகடனில் வெளிவந்து கொண்டிருந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகளை டாக்டர் கே.ராஜா வெங்கடேஷ் இனிமையான அறிவியல் நடையில் எழுதியிருக்கிறார். சுட்டிகள் இதை ஆழ்ந்து படித்துப் பார்த்தால், உடற்கூறு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள பேருதவியாக இருக்கும்.
Be the first to rate this book.