உடைந்து போன ஒருவன் என்ற இந்த நாவல் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று. 1848 ஆம் ஆண்டு ஒரு மாத இதழில் இந்த நாவல் வெளியானது. இந்த கதைக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் சொந்தத் தவிப்புகளுக்கும், தனிப்பட்ட முறையில் அவர் சந்தித்த சம்பவங்களுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இக்கதையில் வரும் கதாநாயகன் பாத்திரம் வாஸ்யாவும் அவனது நண்பன் ஆர்காதியும் அன்பானவர்கள். இனியவர்கள் அனுதாப குணமுள்ளவர்கள். சுதந்திரமான, நல்ல வாழ்க்கைக்கும் தகுதியானவர்கள். இந்தப் பாத்திரங்கள் மூலம் தன் படைப்பின் எதிர்காலக் கருத்துக்களையும், தன மானசீகக் கதாநாயகர்களின் மாதிரிகளையும் கோடிட்டுக் காட்டினார் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
Be the first to rate this book.