சென்ற இரண்டாண்டுகளில் ஜெயமோகன் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் மானுட வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன. பெரும்பாலும் உருவகங்களையும் படிமங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன.
'என் கதைகள் எவையும் அன்றாட வாழ்க்கையின் உணர்வுநிலைகளைச் சார்ந்தவை அல்ல. எளிய மெல்லுணர்வுகள் என் எவையும் இதுகாறும் என்னால் எழுதப்படவில்லை என்பதை திரும்பிப் பார்க்கையில் தெளிவுறக் காண்கிறேன். என் ஆக்கங்கள் எப்போதுமே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை நோக்குபவை. சிறுகதைகள் அந்நோக்கை ஒரு கணத்தில் குவிக்க முயல்பவை. ஆன்மீகமான தத்தளிப்பும் தேடலும் கண்டடைதலும் மட்டுமே என் புனைவுகளின் உள்ளடக்கம். இவையும் அவ்வாறே' என ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Be the first to rate this book.