கிடைத்தவரை போதும், வாழ்ந்தவரை லாபம் எனும் மனநிலை துறவிகளுக்கு வேண்டுமானால் சரிப்படலாம். நம்மைப் போன்றவர்களுக்குக் கண் வானில்தான் பதிந்திருக்கவேண்டும். மலையடிவாரம் அல்ல, மலையின் உச்சியான சிகரம்தான் நாம் கால் பதிக்கவேண்டிய இடம். படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில் நாம் தொடவேண்டிய உச்சம் அதுதான்.
ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாஎன்னும் சந்தேகம்தான் நம்மில் பெரும்பாலானோருக்குத் தோன்றும். அந்தச்சந்தேகத்தை முறித்து உங்களை ஒரு பெரும் பயணத்துக்குத் தயார்ப்படுத்துவதுதான் இந்நூலின் அடிப்படை நோக்கம்.
படிப்பு, வசதி, பின்புலம் எதுவும் உங்களைத் தடுக்காது. இன்று இருப்பதைவிட நாளை ஓர் அங்குலமாவது முன்னோக்கி நகரவேண்டும் எனும் முனைப்பும் அந்த முனைப்பைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பும் இருந்தால் போதும். நீங்களும் ஒரு நட்சத்திரம்போல் பிரகாசிக்கலாம்.
அரசுப் பள்ளிகள் தொடங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள்வரை விரிந்த தளங்களில் செயலாற்றி வரும் நம்பர் 1 மேனேஜ்மெண்ட் குரு சோம. வள்ளியப்பனின் இந்நூல் உங்கள் கனவுகளைத் திட்டமிட்ட முறையில் மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது.
Be the first to rate this book.