அழகியலுக்கும் அரசியலுக்கும் இடையே நைந்ததொரு நூல்பாலத்தைக்கூட நெய்ய முடியாது என்பதாக நிறுவத் துடிப்பவர்களின் நிலத்தில் இரும்புப் பாலத்தை எழுப்பி, அதன்மீது வாளோடும் வயலினோடும் அலைகிறார் லிபி. தூர்ந்த நீர்நிலைகளின், அகழ்ந்த மலைப்பள்ளங்களின், திரிந்த பால்யத்தின் தாளாவலியுடன் தெருக்களில் திரிபவை இக்கவிதைகள். இந்த ஆலவாய் நகரக் கவிதைகள் நமது சமகால வாழ்வின் அநேகத் துயரங்களை விழுங்கியவை. பாகிஸ்தான் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துல்காதிர் பந்துவீசப் புறப்படுகையில் ஏறக்குறைய அது நடுவரை நோக்கியே இருக்கும். பிறகு சட்டெனத் திசைமாறி மட்டையாளனைத் தாக்கும். கூரிய தர்க்கங்களின் ஊடாக லிபியின் கவிதைகளும் அவ்வாறே தகர்க்கின்றன. நாம் விரும்பி காத்திருந்ததும் அதற்குத்தானே.
Be the first to rate this book.