யாவற்றையும் புனிதப்படுத்தி பொத்திப் பொத்தி வைத்து எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது- ஒன்றும் வழக்கத்துக்கு மாறாக நடக்கவில்லை என்று பாவனை செய்து சுயத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் வந்துள்ள நாவல் இது. தனி மனித வாழ்க்கை என்பதோ, ஒரு சமூக வாழ்க்கை என்பதோ மேன்மைகள் மட்டுமே பொதிந்தவை அல்ல,ஒரு படைப்பாளி தன்னைக் காபந்து செய்து கொண்டு மேன்மைகளை மட்டுமே காட்டிவிட்டுப் போய்விடவும் இயலாது. சமூகம் என்பதோ, வாழ்க்கை என்பதோ காதற்பருவத்தில் குளிர் வாசத்தலங்களில் நின்று இசைக்கு ஆடுவதல்ல. பெரியம்மை கண்ட நூர்ஜகான் தனது மகனைப் பிரிய மனமின்றி நடத்தும் ஜீவமரணப் போராட்டம் போன்றதாகவே இருக்கிறது யாவர் வாழ்க்கையும் கலங்க வைப்பதாகவே இருக்கிறது.
கீரனூர் ஜாகிர்ராஜாவின் உரையாடல்கள் மிக இயல்பாக, யதார்த்தமாக, உயிர் சலிப்பதாக இருக்கின்றன. இது இந்திய வாழ்க்கை தமிழ் வாழ்க்கை மனித வாழ்க்கை.
- நாஞ்சில்நாடன்
Be the first to rate this book.