புயல், பூகம்பம், சூறாவளி. இந்த மூன்றையும்விட பல மடங்கு சக்தி வாய்ந்தது சுனாமி. ஆகவே பாதிப்பும் பல மடங்கு அதிகம்.
எப்போது, எங்கே தோன்றும் என்று கணிக்க முடியாது. வரும் முன் காப்போம் என்று தப்பித்துக்கொள்ளமுடியாது. வந்தபிறகு பார்த்துக்கொள்வோம் என்று ஒதுங்கிப் போகவும் முடியாது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் சில மணி நேரங்கள். வரப்போகிறேன் என்று ஒரு சமிக்ஞை. அதற்குள் நாம் தயாராகிவிடவேண்டும். சுனாமி ஏன் உருவாகிறது? சூறாவளிக்கும் சுனாமிக்கும் என்ன வித்தியாசம்? சுனாமியைத் தடுக்கவே முடியாதா? வந்தபின் நிலைமையை எப்படிச் சமாளிக்க வேண்டும்?
Be the first to rate this book.