தொலைதூரப் பயணம் செய்து, கடல் கடந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டுமெனக் கனவு கொண்டிருந்தான் டாம். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிப் பல போர்களில் பங்குபெற்று, புகழ்பெற்றவனாக நீண்ட நாள்கள் கழித்துத் திரும்ப வந்தால், அப்போது பெக்கி தன்னைப் பற்றி எந்த அளவிற்கு உயர்வாக நினைப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தான். அதனை மனம் மறுத்தது. “இல்லை அப்படி வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டான்.
அவனது கிராமத்தில் உள்ள பூர்வீகக் குடிமக்களோடு இணைந்து, அவர்களோடு சேர்ந்து தூரத்தில் உள்ள மேற்கு நாடுகளுடன் சண்டையிட்டு வேட்டையாட வேண்டும் என்று சிந்தித்தான். ஆனால் அதைவிடச் சிறந்த ஒன்று வேண்டுமென யோசித்தவாறு இதனையும் தவிர்த்தான்.
வேகமாகச் செல்கிற கருமையான நீண்ட கப்பலின் மூலம் கடல் கடந்து பயணம் செய்ய வேண்டும். அங்கு ஏற்கெனவே சென்று கொண்டிருக்கிற கப்பல்களை, பின்தொடர்ந்து சென்று அவர்கள் வைத்திருக்கின்ற தங்கம் வெள்ளி போன்றவற்றை அபகரித்துக் கடலுக்கு அடியில் தூக்கி எறிய வேண்டும். “ஆம் அதுதான் சரியாக இருக்கும்” என்று இப்பொழுது அவனது கற்பனையை மனம் ஏற்றுக்கொண்டது. இவர்தான் ஒரு கடற்கொள்ளையர்! உலகம் முழுவதும் பிரபலமானவர். டாம் சாயர் பைரேட்!!
Be the first to rate this book.