குழுக் குழுவாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும் TNPSC தேர்வுகளை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள், சங்கடங்கள், சவால்கள், அவற்றை வென்று கடக்கும் வழி முறைகள், தேர்வுக்குத் தயாராகும் விதம் தொடங்கி ஒரு போஸ்டிங் வாங்கி செட்டில் ஆவது வரை கடைப்பிடிக்கவேண்டிய சகல விதமான நித்ய கர்மானுஷ்டானங்களையும் விளக்குகிறது. TNPSC உடன் துவந்த யுத்தம் செய்து, வென்று ஆபீசரான நமது எழுத்தாளர் ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கிறார். எனவே, இது பொதுவான கோனார் நோட்ஸ் அல்ல. சுய அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட வெற்றிக் குறிப்புகள் வகையில் சேருகிறது. ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்க.
- பா.ராகவன்
Be the first to rate this book.