தோழர் டி.கே.ஆர். மிகவும் மூத்த கட்சி உறுப்பினர். தொழிற்சங்க இயக்கத்தின் அனுபவமிக்க தலைவர். இந்தியத் தொழிற்சங்க மையத்தில் பல்வேறு முன்னணிப் பொறுப்புகளில் பல பத்தாண்டுகள் சேவை செய்தவர். இத்துடன் கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றியவர். இவ்வாறு அவர் பெற்றிட்ட அனைத்து அனுபவங்களையும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவை எவை என்பதைத் தன் திறமைகளின் மூலம் அடையாளம் கண்டு, நாடாளுமன்றக் கடமையை மிகவும் வலுவானமுறையில் ஆற்றியவர்.
– சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய பொதுச் செயலாளார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
Be the first to rate this book.