இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.
அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.
Be the first to rate this book.