சிறுகதை என்பது அனைவருக்குமே பிடித்தமான புனைவு வடிவம். ஒரு நெடுங்கதையோ, நாவலோ அளிக்கக் கூடிய பாதிப்பை அதனினும் பல மடங்கு அளவில் சிறியதாக உள்ள படைப்பில் தருவதில் உள்ள சீரிய முயற்சி, நிகழ்வுகளின் நுட்பமான விவரிப்பு, அக வெளியின் உணர்வுச் சிக்கல்களைச் செறிவூட்டப்பட்ட மொழியில் கட்டமைத்தல், புனைவுத்தன்மை, மனதில் அது கடத்தும் பாதிப்புகள், துவக்கத்திலிருந்து இறுதி வரை வாசிப்பவர்களின் மனதை ஈர்த்து, ஒருமுக அவதானிப்பை நிலை நிறுத்துதல் எனச் சவாலுக்குரிய பல கூறுகளை உள்ளடக்கியது அவ்வடிவம்.
அப்படியானதொரு சீரிய வடிவத்தைத் தன் புனைவு வழியாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பிரவின் தனது முதல் தொகுப்பிலேயே இயன்றவரை அதற்கு நியாயம் செய்திருக்கிறார் என உறுதியாகச் சொல்ல முடியும்."
- எழுத்தாளர் லதா அருணாச்சலம்
Be the first to rate this book.