தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 193334இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.
Be the first to rate this book.