இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழி மட்டுமே தரப்பட்டது. அந்த அடையாளம் வெள்ளையர்களுக்கானது. இந்தியர்கள் அதில் அடங்கவில்லை. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல ஏதோ ஒரு வகையில் நம் நினைவுகளிலிருந்தும் அந்த பங்களிப்பை நீக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏறக்குறைய அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
போரிலிருந்து திரும்பியவர்களுக்கு உரிய அங்கீகாரம் ,உதவிகள் கூட மறுக்கப்பட்டது. போர் முடிந்த பின்பு போர்களத்தில் இறந்தவர்களின் கல்லறைகள். சவக் குழிகள் தோண்டி எடுக்கப்பட்டது. மீண்டும் மரியாதையுடன் மறு புதைப்பு நடத்தப்பட்டது. அந்த மரியாதை கூட இந்திய படை வீரர்களுக்கு கிடைக்கவில்லை.
போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக் காலத்திலும் அவைகள் ஒன்று போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக் காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள் ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று கிராமத்திலிருந்து போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள். சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்த கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.
5 போர் பற்றிய எனது தேடலுக்கு பீரங்கியை வைத்து பீரங்கி சுழி போட்டுக்கொண்டேன்.
டைகரிஸ் நாவல் ச. பாலமுருகன் எதிர் வெளியீடு விலை:550 இரண்டு வருடங்களுக்கு முன்பு Netflixயில் Age of Tank என்ற documentary பார்த்தேன்.முதல் உலக போரிலும் இரண்டாம் உலக போரிலும் பீரங்கிகளின் பங்கை பற்றியது அதோடு சேர்த்து உலக அரசியல் வரலாற்றோடு தகவலுடன் சிறப்பானதாக இருந்தது.அதில் இருந்து போர் பற்றிய எனது தேடலுக்கு பீரங்கியை வைத்து பீரங்கி சுழி போட்டுக்கொண்டேன்.அந்த தேடல் வழியே இன்று நான் வாசித்த போர் பற்றி இந்த டைகரிஸ் நாவல். இதுபோக எனது தாத்தா சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருந்த நேரம் இந்திய தேசிய படை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அழைப்பை ஏற்று ஜப்பான் படையினருடன் இணைந்து பர்மா தேசத்தின் வழியாக ஆங்கிலப் படைகளை எதிர்த்து காலில் ஏற்பட்ட குண்டு காயத்துடன் சண்டையிட்டு ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்பை தொடர்ந்து முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப்போர் அதன்பின் பர்மாவிலிருந்து தரைவழியாக இந்தியா வந்து கல்கத்தா வழியாக மதுரை வந்து மதுரைக் கல்லூரியில் நூலக உதவியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து பலபேர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை நூலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டறிந்து கொடுத்து எந்த புத்தகம் யாருக்கு வேண்டுமானாலும் நூலகத்திலிருந்து கிடைப்பதற்கு பெரிய தகப்பனாரை அணுகினால் போதும் என்று எல்லோரும் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக பணிபுரிந்த எனது தாத்தாவின் வாழ்வை இந்த நாவலின் வில்லியம் வழியாக என்னால் காணமுடிந்தது.வில்லியமுக்கு முதல் உலகபோர் எனது தாத்தாவுக்கு இரண்டாம் உலக போர் ஆனால் போரின் முகம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒன்று நான். நாவலின் கதை களம் போர் என்றவுடன் இந்தியவின் பெருமை தமிழ்நாட்டின் பெருமை என்று உருட்டமால் நடந்த வரலற்று உண்மையை எழுதிய உங்களின் எழுத்தின் அறமே நாவலின் முழுவதும் நிறைந்துள்ளதை என் வாசிக்க முடிந்தது தோழர்.அதற்க்குறிய விருது காலம் உங்கள் இருகரங்களையும் நிரப்பும் கண்டிப்பாக. நாவல் எதைப்பற்றி….! முதல் உலக போரில் இந்தியா பிரிட்டிஸ்க்கு போரில் வெற்றிபெற உதவி செய்தால் பதிலுக்கு இந்தியாவிற்க்கு சுதந்திரம் தருவதாக வாக்குறுதி கொடுத்தது அதை நம்பி இந்தியா முழுவதும் உள்ள போர் என்றால் என்னவென்று தெரியாத அப்பாவி மக்கள் நாட்டின் விடுதலைக்காக சென்று போரில் தங்கள் உயிரை விட்டனர். இராணுவத்தில் சேர சொன்ன இந்தியா,உதவி கேட்ட பிரிட்டிஸ் யாரும் திரும்பி அவர்கள் வர எந்த உதவியும் செய்யவில்லை.இறந்தவர்களை புதைக்ககூட வழி செய்யமால் கழுகும் பருந்தும் கொத்தி தின்றது இந்த உண்மை வரலாற்று கதையை மையம்மாக வைத்து எழுதப்பட்ட நாவல்…. தமிழகத்தில் இருந்து செல்லும் வில்லியம் என்ற இராணுவ வீரனின் கதையை அடிப்படையாக வைத்து அரம்பிக்கும் இந்த நாவல் 1914-1918 நடந்த போரின் கொரமுகத்தை நம் கண்முன்னே காட்ச்சிப்படுத்துகிறது,கதைநாயகனை மையப்படுத்தி போகமால் வரலாற்றில் நடந்த உண்மையை மையப்படுத்தி நாவல் பயணிப்பது அதன் வழி புதிய கதைமாந்தர்களை அறிமுகம் செய்வது என்பது கூடுதல் சிறப்பு,குறிப்பாக ஆர்மீனியர்களின் இனழிப்பு வரலாற்றின் கொரமுகத்தை பார்க்க முடிகிறது இதுபோக கதையில் வரும் துனைகதாபாத்திரங்களின் flashback கண்கலங்க செய்கிறது. கதையில் நாயகனின் காதல் கூடுதல் சிறப்பு நாவல் எங்கும் போரின் அழிவு பற்றிய இருவரி தகவல் அனைத்தையும் எடுத்து போருக்கு எதிராக பயன்படுத்தலாம்.இந்திய படைகள் நாட்டுக்காக போரிட சென்றயிடத்தில் சோற்றுக்கா வாடுவதை படிக்கும் போது உணரமுடிகிறது.படித்து முடித்தும் போரின் மரண ஓலம் இன்னும் என்காதுகளில் கேட்டு கொண்டேயிருக்கிறது…இன்னும் பல அதிர்ச்சியுட்டும் வரலாற்று தகவல் கதைவடிவில் நூல் முழுவதும் இருக்கிறது வாசியுங்கள் எது…? தேசப்பற்று எது போலி பற்று என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நான் வாசித்து முடித்ததும் எனது மாணவர்களுக்கு இந்த நூலை அறிமுகம் செய்து பேசினேன்,ஆகஸ்ட்15 2022 நாவலை Mime performance
Ganesh Pari 12-10-2022 10:28 pm