'திபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில் ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது.
தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்கா கூட அதனை சீனக் குடியரசுக்கு உட்பட்ட ஒரு சுயாட்சிப் பிரதேசமாகத்தான் பார்க்கிறது.
திபெத்தில் நிகழும் கலாசாரப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து வருத்தப்படும் யாரும் திபெத்தின் சுதந்தரத்துக்காக இன்றுவரை எதுவும் செய்ய முடியாமலேயே இருக்கிறது. இந்த வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தான் எத்தனை சோகமயமானது?
தலாய் லாமாவைத் தமது ஆன்மிகத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஏற்றுக் கொண்டு அவரது அடியொற்றி நடப்பவர்கள் திபெத் மக்கள். ஆனால் தலாய் லாமாக்களுக்கே எத்தனை சோதனைகள்?
திபெத்தின் முழுமையான வரலாறைக் சொல்லும் இந்த நூலின் ஆசிரியர் மருதன், ஒரு பத்திரிகையாளர். ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்வையும் க்யூபாவின் உணர்ச்சிமயமான சரித்திரத்தையும் ஒருங்கே சொல்லும் 'சிம்ம சொப்பணம்' இவரது முந்தைய நூல். '
Be the first to rate this book.