பல்வேறு வண்ணங்களால் ஆன ஓவியம் போல, பல நூறு கருவிகளால் வாசிக்கப்படும் இசைக் குறிப்புகள் போல உள்ளது `துயிலின் இரு நிலங்கள்' மொழிபெயர்ப்புக் கவிதை நூல். 1,000 வருடங்களுக்கு முந்தைய கீழைத்தேயக் கவிஞர்களின் கவிதைகள் முதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதைகள் வரை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆன்மிகம், மரணம், துயரம், சமூகம் சார்ந்த கவிதைகள் எனப் பல்வேறு களங்கள் இருந்தாலும், காதலே இந்தத் தொகுப்பின் பிரதானமான பாடுபொருள். செவ்வியல் கவிதைகள் என்பதால், நல்ல தமிழ்ச் சொற்கள் பலவற்றையும் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். காதல் கவிதைகளை அந்தந்த நிலத்தின் ஆன்மாவுடன் தமிழாக்கம் செய்திருக்கிறார். சமகாலக் கவிதைகளுக்கு எஸ்.சண்முகத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு, இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்.
Be the first to rate this book.