"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான்.
கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன்.
வாழ்ந்து கொண்டிருப்பவனை வாழ்த்த என்ன இருக்கிறது? சோர்ந்து போகாமல் இருக்கட்டும் அவன் சோகங்களும் கோபங்களும்."
- முன்னுரையில் கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா
Be the first to rate this book.