இந்த நூல் ஆசிரியர் தனது பதின் வயதில் (1923) துப்பறியும் அதிகாரியாக பணியில் சேர்ந்து, இந்நூல் எழுதும் வரையிலான (1956) தனது அனுபவங்களை இலக்கிய நயத்துடன் முன் வைக்கிறார்.
சோவியத் அமைப்பில் துப்பறியும் அதிகாரிகளின் மனித நேயத்தை, மக்கள் நீதிமன்றங்களின் எளிமையை, மரியாதைக்குரிய வேலை வாய்ப்புகள் கிடைத்ததால், சோஷலிச உணர்வு மேலோங்கி பழைய குற்றவாளிகள் தாமாகவே மனம் திருந்தியதை இந்நூல் சுவாரசிய சம்பவங்களுடன விளக்குகிறது.
புதிய பொருளாதார கொள்கை (NEP) விளைவாக நெப்காரர்கள் எனும் புதிய வகை குற்றவாளிகள், கேன்சர் செல்களை போல் உருவானதையும் வாசகருக்கு இந்நூல் உணர்த்துகிறது.
Be the first to rate this book.