‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்னும் இத்தொகுப்பு இன வெறுப்புக்கும் வன்முறை அரசியலுக்கும் போருக்கும் எதிரான கவிதைகளைக் கொண்டிருக்கிறது. மதம், மொழி, இனம், தேசியம் என எந்தத் தரப்பையும் சாராத குரலை இந்தக் கவிதைகளில் கேட்கலாம். இக்கவிதைகள் துப்பாக்கிக்கு எதிரானவை. எல்லா விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரானவை. அமைதியையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் வேண்டி நிற்பவை.
போரில் வெற்றிபெறுபவர் யாரும் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. எல்லாப் போர்களுக்கும் எதிரான குரலைக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் சமகால அரசியல் கவிதைகளில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளன.
Be the first to rate this book.