அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைகளிலும் கலையின் பிரதிபலிப்புகளை நம்மால் இனங்காண முடிகிறது. குறிப்பாக முன்னெப்போதையும் விட அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது. மாறாக அது உலகம் சார்ந்த தனக்கான தனித்த பார்வையைக் கொண்டிருக்கிறது. அதையே நாம் அரசியல் என்றழைப்போமெனில் நியாயம் அன்பு அறம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக அது இருக்கும். வெவ்வேறு தேசங்களின் கதைகளாக இருந்தாலும் அதிகாரத்தின் உக்கிரத்தை அது மனிதர்களிடையே உண்டாக்கும் துயரங்களை அதற்கு பதிலீடாக இருந்திருக்கக்கூடிய அன்பை விரிவாகப் பேசும் கதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன.
Be the first to rate this book.