படைப்பு, பதிப்பு துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகளையும், குறிப்பாக, பதிப்புரிமை, காப்புரிமை, சார்புரிமை, உரிமம் தொடர்பான தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இந்நூலில் விஜயலட்சுமி விவரிக்கிறார். படைப்பாளிக்கு அவரது படைப்பின் மீதுள்ள உரிமை, படைப்பாளருக்கு இருக்க வேண்டிய அறிவு நேர்மை, பிறரது படைப்புகளை வாசித்து அவற்றின் தாக்கத்தில் எழுதப்படும் எழுத்தில் படைப்பாளி பாவிக்க வேண்டிய முறைமை, தனது எழுத்துக்களை பெருக்க அவர் செய்யும் முயற்சிகளில் அவர் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியம் ஆகியனவற்றை இந்நூல் தெளிவாகவும் யாவருக்கும் புரியக்கூடிய மொழியிலும் எடுத்துரைக்கிறது.
- வ. கீதா
Be the first to rate this book.