என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை, ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது. ஆகவே ஒரு புன்னகையாக, ஒரு மெல்லிய துயராக, ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை. அவை வரும் வகையில் அப்படியே எழுதிக் கடந்துவிடுகிறேன்.
ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிறேன். அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன். அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது. இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.
Be the first to rate this book.