நுனி நாக்கில் பிறரை சட்டென 'காஃபிர்' என அழைக்கும் 'மெய்நிகர்' உலகில் வாழ்கிறோம்.
இந்த வேகத்துக்கு சற்றும் குறையாமல், தொழாதவர்களை 'காஃபிர்' என்கிறது இஸ்லாம்.
முஸ்லிம் வாழ்வின் பிரதான இலட்சியமான மறுமை வாழ்க்கை தொடக்கத்தில், தொழுகையைப் பற்றிய விசாரணைதான் முன்னணி இடம் வகிக்கிறது.
ஆனால் இந்த உலகில், சமூக, அரசியல், பொருளாதார வாழ்வுக்கு வேறு எந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாம் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.
அவ்வளவு ஏன்?
இஸ்லாம் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டி என வரலாறு சிலாகிக்க்கிறது. எனும்போது,
தொழுகை என்பது என்ன?
அது ஒரு வழிபாட்டு முறை, சடங்கு என்றால், இஸ்லாம் இவ்வளவு அழுத்தம் கொடுக்க காரணம் என்ன?
தொழுகை என்பது வழக்கமான பொருளில் அல்லாமல், வேறு பொருளில் விளங்க வேண்டுமா? மறுவாசிப்பு செய்ய வேண்டுமா?
லெளகீக வாழ்க்கையோடு, ஆன்மிக நிலையான தொழுகைக்கு ஒட்டும் உறவும் உள்ளதா?
அல்லது தொழுகை என்பது துறவரத்தின் தொடக்க நிலையா?
எண்கோணங்களில் தொழுகை பற்றி ஆராய்கிறது இந்த நூல்.
Be the first to rate this book.