நபிகள் நாயகம் தமக்குக் கிடைத்த நற்செய்தியை தம் சமூகத்திடம் பகிர்ந்தபோது அதை ஏற்றுக்கொண்ட முதற்கட்ட மனிதர்களில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அடக்கம். சொல்லப்போனால், அந்த நற்செய்தியைப் பெற்ற முதல் நபரே ஒரு பெண்தான். அத்தகைய முன்னோடிப் பெண் போராளிகள்தாம் இந்நூலின் நாயகியர்.
தோழியர்களுள் வாளெடுத்துச் சமர் புரிந்தவர்களும் உண்டு. சகல துறைகளின் ஊடாக இஸ்லாமிய வரலாற்றுக்குப் பங்களித்தவர்களும் அதிகம். ‘முஸ்லிம் பெண்கள் வீட்டிற்கு மட்டுமே நாயகிகள், வீடு மட்டுமே அவர்களின் களம்...’ என்றெல்லாம் அவர்களைக் குறித்துக் கட்டமைக்கப்படும் அச்சுப் பதிவுகளைப் போட்டுடைக்கிறது இந்நூல்.
ஒவ்வோர் அத்தியாயமும் உணர்ச்சி மிக்க வரலாற்றுச் சிறுகதையைப் படித்த திருப்தியை அளிக்கிறது. அவற்றை நூருத்தீனின் எழுத்தில் வாசிக்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை.
அழகு தமிழில், சுவை குன்றாது, அதே நேரத்தில் மார்க்க நெறியும் பிறழாமல் நூருத்தீன் இதனை ஆக்கித் தந்துள்ளார். இந்நூல் இஸ்லாத்திற்கு மட்டுமின்றி, தமிழுக்கும் சூட்டப்பட்ட இன்னோர் அணி.
- பேராசிரியர் அ. மார்க்ஸ்
Be the first to rate this book.