நபிகள் நாயகத்தின் ‘தோழர்கள்’ (சஹாபாக்கள்) வரலாற்றுக்கு அடுத்து நாயகத்தின் ‘தோழியர்’ (சஹாபியாக்கள்) குறித்து நண்பர் நூருத்தீன் அவர்கள் எழுதியுள்ள அழகிய நூல் இது.
அழகுத் தமழில், சுவை குன்றாது, அதே நேரத்தில் மார்க்க நெறியும் பிறழாமல் ஆக்கித் தந்துள்ளார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தோழியரின் வரலாற்றில் ஓர் அற்புதமான கணத்துடன் தொடங்குகிறது. பின் அது பின்னோக்கிச் சென்று அவரது வரலாற்றைச் சொல்கிறது. ஓர் உணர்ச்சி மிக்க வரலாற்றுச் சிறுகதையைப் படித்த திருப்தி நமக்குக் கிட்டுகிறது.
இஸ்லாமிய இலக்கியங்களைப் பொருத்த மட்டில் அவற்றிற்கு இரு பரிமாணங்கள் உண்டு. ஒன்று அவை இஸ்லாமியத்திற்கு மட்டுமின்றி தமிழுக்கும் வளம் சேர்ப்பவை. அந்த வகையில் இது தமிழுக்குச் சூட்டப்பட்ட இன்னோர் அணி.
- அ. மார்க்ஸ்
Be the first to rate this book.