முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் அடங்கி யிருக்கின்றன.
இரண்டாவதாக, தொழிலாளி வர்க்கத்தின் பொதுவான வர்க்க கடமைகளின் அடிப்படையில்தான், தொழிற் சங்கங்களின் கடமைகளை வரையறுக்க முடியுமாதலால், தொழிற்சங்க பிரச்சினைகளை எல்லையாகக் கொண்ட குறுகிய கூட்டைத் தாண்டி, தொழிலாளர் இயக்க பிரசினைகளைப் பற்றி மார்க்ஸும், எங்கல்ஸும் வகுத்த அரசியல் கொள்கையையும் புத்தகம் ஆராய்கிறது.
மூன்றாவதாக, எல்லா விஞ்ஞானங்களையும் விட சிறந்த அரசியல் விஞ்ஞானம் சரித்திரம்ல் இதர விஞ்ஞானங்களைவிட அதிகமாக, வர்க்க கண்ணோட்டத்தைப் பெற்றது சரித்திரம். எந்தவிதமான கட்சிப் பொறுப்போ, அரசியல் பொறுப்போ இல்லாதவரக்ள்தான், அல்லது இந்தப் பொறுப்புணர்ச்சியை இழந்தவர்கள்தான், நிகழ்காலத்துடன் ஒட்டுதல் இல்லாமல், இறந்த காலத்தை, சரித்திரத்தை, தனிமைப்படுத்தி ஆராய முடியும்.
- ஏ. லாஸோவஸ்கி
Be the first to rate this book.