புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு பழைய சுவரொட்டிச் சித்திரம் அது. அந்தச் சித்திரத்திலிருந்த தொழிலாளி. ஆண்மை இயல்புகளிலும் சக்திமிக்க உருவிலும் கரங்களின் ஆவேச வீச்சிலும் அலெக்சேயையும் விக்தரையும், அந்தோனயும், கோஸ்த்யாவையும், இலியா மத்வேயெவிச்சையும், கோடானு கோடியான சாதாரண உழைப்பாளர்களையும் ஒத்திருந்தான். கனமான சம்மட்டியை உயர்த்தி அந்தத் தொழிலாளி. உலக் கோளத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சங்கிலியை அடிக்கிறான். தன் பலம் அனைத்தையும் கொண்டு ஓங்கி அடிக்கிறான். பின் வாங்காது மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறான். ஓங்கி அவன் அடிக்கையில் சங்கிலியின் இரும்புக் கரணைகள் பிளந்து தகர்ந்து விழுகின்றன. அவனுடைய சம்மட்டி அடிகள் அனைத்துக் கண்டங்களிலும் எதிரொலிக்கின்றன.
Be the first to rate this book.