சஹாபாக்கள் எனப்படும் நபித் தோழர்களின் புனித வரலாறு “தோழர்கள்”. மனங்களை வென்றெடுத்து, மனிதர்களைப் புனிதர்களாக்கிய வரலாற்று நிகழ்வுகள் “தோழர்கள்”. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிய 70 தோழர்களின் வரலாறு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாகம் அத்தொடரின் முதல் 35 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்வின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் நிகழ்வுகளின் நிஜங்களில் ஐயப்பாட்டின் நிழல்கூட விழுந்துவிடாதவாறு மிகவும் கவனமாக, நிறுவப்பட்ட சான்றுகளின் வாயிலாகப் பார்த்துப் பார்த்துக் கோத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு தோழரின் வாழ்வையும் நாம் படிக்கும்போது மனம் தவிக்கின்றது. பரபரக்கின்றது. அழுகை முட்டிக் கொண்டு வருகிறது. நம்மை நினைத்து வெட்கம் மேலிடுகிறது. இப்படியெல்லாம் நேர்மையாக, எளிமையாக, உண்மையாக, வீரமாக, பேரன்பாக வாழ்தல் சாத்தியமா? என்று வியப்பு மேலிடுகிறது.
இந்நூலின் ஆசிரியர் ஒரு திரைமொழியை நூல் முழுவதும் கையாண்டிருக்கிறார். ஒவ்வோர் அத்தியாயத்தின் திறப்பும் முடிப்பும் செம்மையாக அமைந்திருக்கின்றன. காட்சிகள் மனத்திரையில் விரிகின்றன. குதிரையின் குளம்பொலிகள் செவிக்குள் ஒலிக்கின்றன.
~
“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்."
- அதிரை அஹ்மது
Be the first to rate this book.