இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அடர்த்தியுடன் அந்தக் குரல் இந்த வாழ்வின் பரப்பில் படர்ந்து கொண்டேயிருக்கிறது. நான் வாங்கிக் கொண்ட விதத்தில், என் காதில் விழுவதைச் சொல்கிறேன். சொல்வதைப் பாசாங்கின்றிச் சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாக இருக்கிறது.
Be the first to rate this book.