எறும்பின் பாதையில் போய்க் கொண்டிருந்தால் எதுவரை செல்ல முடியும்.. பார்வையில் புலப்படும் எறும்பின் பயணம், கிட்டாத காட்சிக்கு பிறகு என்ன நடக்கும்.. முடிவற்ற ஒன்றின் பின்னால் நாம் ஓடி ஓடி நிற்கிறோம். களைத்து மீண்டும் ஓடுகிறோம்.
குறைந்து வரும் ஆற்று நீரில் இன்னும் கொஞ்சம் பள்ளத்தை தோண்டி மீன் குஞ்சுக்கு இன்னும் கொஞ்சம் விசாலத்தை உண்டு பண்ணும் ஒரு சிறுமியின் கைகளும் மனமும் போன்றது தான் இத்தொகுப்பு.
மனித மனங்களின் உணர்வுகளை உள்ளங்கையில் அள்ளி எடுக்கும் நீரில் மிதக்கும் பிம்பத்தை, பெற்றுக்கொள்ளும் கைகளுக்கும் இத்தொகுப்பின் வழியாக வாசிப்பவருக்கும் தாரை வார்க்கிறார் கவிஞர் ந. பெரியசாமி.
Be the first to rate this book.