இன்று புலம்பெயர்ந்து தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயந்தி சங்கர். சிங்கப்பூரில் வாழும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக 5 சிறுகதை தொகுப்புகள், 5 நாவல்கள், 5 கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள் (சீன மொழியிலிருந்து ஆங்கிலம் வழி தமிழுக்கு) சிறுவர் இலக்கியம் என்று நிறையவே எழுதியிருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள பத்து கதைகளும் மனித வாழ்வில் ஏற்படக் கூடிய தோல்விகள், அழுத்தங்கள், அற்புதங்கள், விநோதங்கள், வீழ்ச்சிகள், வெற்றிகள் ஆகியவை பற்றி ஓர் உலகப் பொதுத்தன்மையுடன் பேசுகின்றன. சம்பவங்கள் புலம்பெயர்ந்த ஆசிரியர் ஒருவரின் கண்களினூடாக விரிகின்றன. அவருடைய கதை சொல்லலில் உள்ள புதுமையும் மொழி எளிமையும் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. தொட முடியாத தூரத்தே தெரியும் வான் விளிம்பை நோக்கி தன் படைப்புகளை நகர்த்தியபடியே இருக்கும் ஜெயந்தி சங்கர் அந்தப் பயணத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
Be the first to rate this book.