தினத்தந்தியில் ஞாயிறுதோறும் வெளியாகும் குடும்ப மலரில் முனைவர் பாபு புருஷோத்தமன் எழுதி தொடர்ந்து 54 வாரங்கள் வெளிவந்த தூரமில்லை தொட்டு விடலாம் என்ற தன்னம்பிக்கை தொடரின் தொகுப்பே இந்த நூல்.
குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, வாழ்வியல் நெறிமுறைகள் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. புண்படுத்தக்கூடாது பண்படுத்த வேண்டும் கேலிக்கு வேண்டும் வேலி பண்புகளை வளர்க்கும் பண்டிகைகள் நல்ல பழக்கம் நம்மை உயர்த்தும் இல்வாழ்க்கை இனிக்க முதியவர்கள் அனுபவ பொக்கிஷங்கள் சொந்தத் தொழிலே சொர்க்கம் சோம்பலுக்கு விடை கொடுப்போம் இயல்பாகவே அமையட்டும் இரக்கக் குணம் போலி கவுரவம் பொல்லாதது என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் சொல்லப்பட்ட கருத்துகள் விழுமியவை அனைவராலும் விரும்பத்தக்கவை. பயனுள்ளவை; உள்ளத்தைப் பண்படுத்தக்கூடியவை.
வெற்று வார்த்தைகளிலும் வெற்றி உண்டு. ப்ளீஸ், தேங்க்யூ ஸாரி என்ற மும்மூர்த்திகள் நம் வசம் இருந்தால்.. எந்த மொழியையும் கற்றுக் கொள்ள ஆர்வம் வேண்டும். ஆசை வேறு; ஆர்வம் வேறு.. திட்டமிடடால் எல்லாப் பயணங்களும் இனிதாகவே முடியும் இன்றைய தேடுதலின் சுகத்தில் நாளைய வாழ்க்கையை இழந்து விடக்கூடாது கோபத்தின் ஆபத்தை உணர்வோம்; கோபத்தை முற்றிலும் ஒழிப்போம் நிலையானது லட்சியங்களே; லட்சங்கள் அல்ல என்ற உண்மையை இளைஞர்கள் மனதில் பதிய வைப்போம் எதிர்காலம் என்பது வாளிணிப்புகள் நிறைந்த கடல் எந்தத் திசையிலும் செல்லலாம் எந்த நிலையிலும் வெல்லலாம் ஆர்வம், திறமை, உழைப்பு இருந்தால்.. என்பன போன்ற நல்லொழுக்கக் கருததுகளைப் பக்கத்துக்குப் பக்கம் விதைத்துள்ளார். புத்திசாலித்தனத்தை உருவாக்கும் அருமையான கருத்துக் களஞ்சியம்.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இவரது எழுத்துகள் ஒளி காட்டி வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்றக்கூடியது; உங்கள் பிள்ளைகளுக்குப் பரிசளிக்க தகுதியானது.
முனைவர் பாபு புருஷோத்தமன்
தினத்தந்தியில் ஞாயிறுதோறும் வெளியாகும் குடும்பமலரில் முனைவர் பாபு புருஷோத்தமன் எழுதி தொடர்ந்து 54 வாரங்கள் வெளிவந்த 'தூரமில்லை தொட்டுவிடலாம்' என்ற தன்னம்பிக்கைத் தொடரின் தொகுப்பே இப்புத்தகம். குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வாழ்வியல் நெறிமுறைகள் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது இத்தொடர். அரசு விருது பெற்ற நல்லாசியர்-எழுத்தாளர்-பேச்சாளர்-சமூக சிந்தனையாளர் என பன்முகங்களைக் கொண்ட பாபு புருஷோத்தமன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குண்ணங்குளத்தூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். கற்றுத் தேறி கல்வியாளராக ஜொலிப்பவர். இப்போது சென்னை கொளத்தூரில் எவர்வின் பள்ளி குழுமத்தின் தலைவராக செயலாற்றி வருகிறார். 1992-ல் 78 மாணவர்களுடன் இவர் தொடங்கிய இப்பள்ளி இப்போது 10,000-க்கு மேற்பட்ட மாணவர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்காக 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள், பாடல்கள் எழுதியுள்ள முனைவர் பாபு புருஷோத்தமன், 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த கல்வியாளர் என்ற விருதை பல அமைப்புகள் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன. தலைசிறந்த கல்வியாளராகத் திகழும் இவரின் கருத்துக்கள் பிரபல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. கல்வி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
Be the first to rate this book.